Wednesday, 29 August 2012

நற்பேறு பெற்றோர்

நற்பேறு  பெற்றவர் யர்ர்?-
  அவர் பொல்லாரின்  சொல்லின்படி நடவாதவர் :
பாவிகளின் தீயவழி நில்லாதவர் :
   இகழ்வாரின் குழுவினில் அமராதவர் :
ஆனால்.அவர் ஆண்டவரின்
   திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர் :
அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் :
   அவர் நீரோடையோரம்
நடப்பட்ட  மரம் போல் இருப்பார் :
  பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாய்
இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்:
  தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்:

ஆனால்,பொல்லார் அப்படி இல்லை :
  அவர்கள் காற்று அடித்துச் செல்லும்
பதரைப்போல் ஆவர்:
  பொல்லார் நீதிதீர்ப்பின்போது   நிலைநிற்கமட்டார்:
பாவிகள் நேர்மையாளரின் மன்றத்தில் இடம் பெறார் .
   நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார் :
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும் .
   (திருப்பாடல்கள் 1 : 1-6)     

   

Monday, 30 July 2012

"இயேசுவின் கல்லறையில் கண்டெடுக்கபட்ட செபம் "

செபத்தின் வரலா று :
 நமது ஆண்டவருடைய
திருக்கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட  இப்பரிசுத்த
செபமானது , யாதொருவர் இதை பிரதி தினமும்
செபித்தாலும்  அல்லது அவர்கள் அருகில் வைத்து
கொண்டிருந்தாலும்  காதால்  கேட்டாலும் அவர்கள்
சடுதி மரணத்தால்  சாகமாட்டார்கள் , தண்ணீராலும் விஷமுள்ள  பூச்சிகளாலும்  மரணம் அடைய மாட்டார்கள் .
கர்ப்ப வேதனை படும் எந்த பெண்களும் இதை செபித்தால்
அவர்களை  எந்த துன்பமும் அணுகாது.
இதை செபித்து வரும் எந்த வீடும் ஆண்டவருடைய  ஆசீர்வாதத்தால் நிறையும் , இவர்கள் மரண நாள்
நெருங்கையில் 3 நாட்கள் முன்பாகவே
எச்சரிபுக்குள்ளாவார்கள் என்று அநேக
வேதபோதகரர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது .
செபம் :
ஓ! மிகவும் வந்திக்க தக்க கர்த்தாவும் , இரச்சகருமாகிய
இயேசு கிறிஸ்துவே!
எங்கள் பெரும் பாவத்திற்காக கொலை களத்தில் 
உண்மையாகவே இறந்தீர்.
கிறிஸ்து இரச்சகருடைய  பரிசுத்த சிலுவையே  எங்களுடைய நினைவுகளை கவனியும் .
ஆண்டவருடைய  பரிசுத்த சிலுவையே! 
எந்த  ஆயுத  அபாயங்களுக்கும்  எங்களை தப்பவியும் , 
கர்ததருடைய  பரிசுத்த சிலுவையே! 
எங்களை சகல துன்பங்களிருந்தும்  காப்பாற்றும் .
இயேசு  இரச்சகருடைய  பரிசுத்த சிலுவையே! 
எங்கள் பகைவரிடமிருந்து எங்களை பாதுகாத்தருளும் ,
எங்கள் கர்ததருடைய  பரிசுத்த சிலுவையே!
எங்கள் அபாய மரணத்தினின்றும்  எங்களை 
காப்பாற்றி நித்திய  ஜீவனை  தந்தருளும் .
சிலுவையில் அறையுண்ட நாசரேத்து இயேசு நாதரே!
எபோதும் எங்கள் மீது இறக்கம் வையும் .
ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்துநாதருடைய  
மகிமையாலும் அவருடைய பாடுகளாலும்  தெய்வத்தன்மைக்குக்குரிய  மோட்ச 
ஆரோகணத்தினாலும்  எங்களை 
பரோலோகத்தில் சேர்க்க உண்மையாகவே 
அந்த நாளில்  மாட்டுத்  தொழுவத்தில் பிறந்தீர் .
மெய்யாகவே நீர் பிறந்த 13 ம்  நாள்  3  ராஜாக்களால்  
தூபம் பொன் வெள்ளைப் போளம்  முதலிய  காணிக்கைகள்  அளிக்கப்பட்டீர்,பெரிய 
வெள்ளிக்கிழமையில்  கல்வாரி மலையின் 
மேல் சிலுவையில் அறையப்பட்டு  உயிர்விட்டு  
நிக்கோதேமு,சூசை என்னும் பக்தர்களால் 
சிலுவையினின்று  இறக்கி அடக்கம் செய்யபட்டீர் ,
மெய்யாகவே நீர் மோட்சத்திற்கு  எழுந்தருளினீர். 
ஆகவே கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து 
நாதருடைய  மகிமையானது எங்களைச் சத்துருக்களுடைய  
வஞ்சனைகளினின்று  இப்போதும்  எப்போதும் காப்பாற்றும் .
ஆண்டவராகிய  இயேசுவே  , எங்கள் மீது  கிருபையாயிரும் ,
 புனித மரியாயே , புனித  சூசையப்பரே  எங்களுக்காக 
வேண்டிக்  கொள்ளும் .( தங்களுக்கு வேண்டியதைக்  கேட்கவும் .)
கர்த்தராகிய   இயேசுவே, உம்முடைய பாடுகளின் 
வழியாய் இந்தப் பாவ உலகத்தினின்று  உம்முடைய  
ஆத்துமம் பிரிந்தது உண்மையே! அப்படியே  
நாங்களும்  எங்கள் வாழ்வின்   இறுதி  
வேளையில் படும் துன்பங்களை  உமது  
இரக்கத்தின்  கண்கொண்டு  பாரும் உமது  
பாடுகளின் மூலமாக எங்களுக்கு நேரும் எல்லா  
இடையூறுகளிலும்  இப்போதும் எப்போதும்  எங்களைத்  
தப்பவியும் .
ஆமென் .Monday, 27 February 2012

நோன்புஇருத்தல்நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடகாரரைபோல முகவாட்டமாய்
இருக்கவேண்டாம்.தாங்கள் நோன்பு இருக்கும்போது மக்கள் பார்க்க
 வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திகொள்கிரார்கள்.அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிரேன்.நீங்கள்
நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து,முகத்தை
கழுவுங்கள்,அப்பொழுது நோன்பு இருப்பது மனிதருக்கு தெரியாது;மாறாக
 மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு தெரியும்.மறைவாய் உள்ளதைக்கானும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு
அளிப்பார். மத்: 16 -18 .Thursday, 23 February 2012

தவக்காலம்


இயேசு 40 ௦ நாள் பகள் இரவு உபவாசம் இருந்து உலக மக்களுக்காக ஒலிவமலையில் தம்மை தாமே வருத்திக்கொண்டு ஜெபத்தில் ஈடுபட்டிருந்தார்.அவரது சீடர்களும் அவரை பின் தொடர்ந்தார்கள்.அந்த
இடத்தை அடைந்ததும் அவர்களிடம்" சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார்.பிறகு அவர் அவர்களை விட்டு
கொஞ்சதூரம் விலகிசென்று முழந்தாள்படியிட்டு இறைவனிடன் வேண்டினார்:
தந்தையே உமக்கு விருப்பம்மானால் இத்துன்பகின்ணத்தை என்னிடமிருந்து
அகற்றும். ஆனாலும் என் விருபப்படி அல்ல;உம் விருப்பப்படியே நிகழட்டும்" என்று கூறினர்ர்.
அப்பொழுது வின்னகதிலிருந்து ஒரு
 தூதர் அவருக்குத் தோன்றி
 அவரை வலுப்படுத்தினார்.அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே உருக்கமாய் இறைவனிடம் வேண்டிகொண்டிருந்தார் அவரது வியர்வை பெரும் இரத்த துளிகளை போல தரையில் விழுந்தது.Saturday, 31 December 2011

புத்தாண்டுவாழ்த்துக்கள்

குடும்பவாழ்வில் பிரச்னை இல்லாமல்,கடன் பாரங்கள் இல்லாமல்,
வியாதிகள் இல்லாமல்,வியாபாரத்தில் நஷ்ட்டம் இல்லாமல்,
தனிப்பட்ட வாழ்வில் குழப்பம் இல்லாமல்,நல்ல சந்தோசமாக 
இந்த புத்தாண்டு அமையவேண்டி இறைவனை வேண்டி அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.


என்றும் அன்புடன்
சேசு,

Friday, 23 December 2011

கிருஸ்மஸ் செய்திகள் & வாழ்த்துக்கள்''உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்''
இழந்துபோனதைத் தேடி மீட்கவந்த மீட்பரே!உலககவலைகளால் அன்பை
ந்த,மகிழ்சியை ந்த,ஏன் வாழ்வையெ  ந்த,என்னற்ற மக்களை அவர் கரங்களுக்குள் வைதுக்கொள்ளத் மீண்டும் பிறந்திருக்கிறார்"
அனைவருக்கும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துகள்,,
Thursday, 8 December 2011

ஏசுவின்பிறப்பு.


"தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது .
அவர்கள் வாழும் முன் மரியா கருவிற்றிருந்தது தெரிய வந்தது .அவர் தூய
ஆவியால் கருவுற்றிருந்தது . அவர் கணவர்  யோசேப்பு நேர்மையாளர்.
அவர் மரியாவை இகழ்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்  மறைவாக விலக்கிவிடத்திட்ட மிட்டார் . அவர் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்கு கனவில் தோன்றி யோசேப்பே  தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்று கொள்ள அஞ்ச வேண்டாம்  .ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூயாவியல்தான் .அவர் ஒரு மகனை பெற்றெடுப்பார் .அவருக்கு இயேசு எனப்பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிருந்து மீட்பார் என்றார் .